க.பொ.சாதாரண தர மாணவர்களின் அடைவு மட்டத்தினை மேம்படுத்துவதற்காக விசேட செயற்திட்டத்தினை ஆரம்பித்தல்.
இவ்வருடம் டிசம்பர் மாதம் (2021) இல் க.பொ. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் அடைவு மட்டத்தினை மேம்படுத்துவதற்காக விசேட செயற்திட்டத்தினை ஆரம்பிப்பது தொடர்பில் பெற்றார்களுடனான சந்திப்பு கடந்த 2021.02.13 அன்று சனிக்கிழமை மாலை 4.00pm அளவில் பாடசாலையின் அதிபர் K.றஸிம் அவர்களின் தலைமையில் கணித அறையில் நடைபெற்றது. இம்மாணவர்களுக்கு கற்பிக்கும் வகுப்பாசிரியர்களான M.S.M.Suja ஆசிரியர், ஆசிரியைகளான S. றம்சியா நிகாஸ் ,நிசார் சிபா மற்றும் பெற்றார்களும் கலந்து கொண்டதோடு சிறந்த பெறுபேறுகளை அடைந்து கொள்வதற்காக பல தீர்மானங்கள் எட்டப்பட்டன.

1) பாடசாலை கல்வியினை வெற்றிகரமான முறையில் மேற்கொள்வதோடு அதற்கு சமாந்தரமாக தொடராக வருடம் முழுவதும் இம் மாணவர்களுக்கு விசேட செயற்திட்டத்திகான பிரத்தியோக வகுப்புகளை நடத்துதல்,
2) பிரத்தியோக வகுப்புகளினை பெற்றாரின் பங்களிப்புடனும் மேற்பார்வையுடனும் நடத்தப்படுவதுடன் நிதி கையாழ்கையினை பூரணமாக பெற்றோரே மேற்கொள்ளல்.
3) பெற்றோர் சார்பில் ஒரு குழுவினை அமைத்தலுடன் இக்குழுவின் ஊடாக நடத்தப்படும் இவ் செயற்திட்டத்தினை (மேலதிக வகுப்புகளினை) ஒழுங்குபடுத்த பாடசாலையின் ஆசிரியர் M. S.M.சுஜா அவர்களினை நியமித்தல்.
4) மாதம்தோரும் மாணவர்களின் கற்றல் மேற்பாடு மற்றும் செயற்திட்டத்தின் செயற்திறன் தொடர்பில் ஒழுங்கு படுத்தப்பட்ட பெற்றார் குழுவின் ஊடாக மீளாய்வு கலந்துரையாடல்களினை ஏற்படுத்தல். போன்ற தீர்மானங்கள் எட்டபட்டு இவ் பெற்றார் கலந்துரையாடல் இனிதே 5.00 pm மணியளவில் நிறைவு பெற்றது.
