LED போகஸ் மின்குமிழ் வழங்கிவைப்பு.
மிக நீண்ட காலமாக எமது பாடசாலை இருளில் காணப்பட்டதினை கருத்திற்கொண்டு பாடசாலை வளாகத்தினை ஒளியூட்டும் நோக்கில் தாமாக முன் வந்து பாடசாலையின் சிற்றூழியரான நாகூர் பிச்சை சஸிம் அவர்கள் தனது சொந்த நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட 02 LED போகஸ் மின்குமிலினை பாடசாலையின் அதிபர் K. றஸிம் அவர்களிடம் இன்று திங்கள் கிழமை (2021.02.22) கையளித்தார்.
இவர் இக்கல்லூரி மாணவர்களையும் ஆசிரியர்களினையும் கடந்த காலத்தில் ஊக்கப்படுத்தும் வகையில் பல பரிசுகளையும் வழங்கியுள்ளமை பாராட்டதக்கது. இதனை வழங்கி வைத்த N.P சஸிம் அவர்களுக்கு பாடசாலை நிருவாகம் மற்றும் பாடசாலை சமூகம் சார்பில் நன்றிகள் உறித்தாகட்டும்.
நன்றி – பாடசாலை முகநூல்
