பாடசாலை மட்டத்திலான சிறந்த உதைப்பந்தாட்ட அணியினை உருவாக்குவதற்கு பங்களிப்பு செய்தல்.
எமது பாடசாலையில் இணைப்பாட விதான செயற்பாட்டில் உதைப்பந்தாட்டத்தினை வலுப்படுத்தி திறமையான இளம் உதைப்பந்தாட்ட வீரர்களினை இனம் காண்பதற்காக பாடசாலை மாணவர்களுக்கு உதைப்பந்தாட்டத்திற்கான பயிற்சி முகாம் 2021.02.10 ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் வேலைத்திட்டத்திற்கு தாமாக முன்வந்து பெருமதியான இரண்டு உதைப்பந்துகளினை மூதூர் பெரிய பாலத்தினை சேர்ந்தவரும் சமூக சேவகருமான A.R.முகம்மட் அஸாம் அவர்கள் பாடசாலை அதிபர் K. றஸிம் அவர்களிடம் வழங்கிவைத்தார்கள்.

இவ்வாறு வழங்கி வைக்கபட்ட பொருள்களினை இவ் வேலைத்திட்டத்திற்கு பொருப்பானவரும் உடற்கல்வி ஆசிரியருமான A.H.Y. அரபாத் ஆசிரியரிடமும் , பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளரான A.M. அம்ஸாத் அவர்களிடமும் அதிபர் K.றஸிம் அவர்கள் 2021.02.22 இன்று வழங்கிவைத்தார்கள்.

இவ் உதவியினை செய்த A.R.M அஸாம் அவர்களுக்கு பாடசாலை நிருவாகம் மற்றும் பாடசாலை சமூகம் சார்பிலும் மகத்தான நன்றிகள் உறித்தாகட்டும்….
நிருவாகம்.
