தேசிய டெங்கு ஒழிப்பு விசேட சிரமதான நிகழ்வு.
வெள்ளிக்கிழமை 19.03.2021 தி/மூ/அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் பாடசாலையின் அதிபர் K. றசீம் அவர்களின் ஒருங்கிணைப்பில் பாடசாலையின் உயர்தர கலைப்பிரிவு தரம் 12 வகுப்பாசிரியரான இஸ்மாயில் றிஸ்வான் (நளீமி) அவர்களின் வழிநடத்தலுடன் அவ்வகுப்பு மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இச் சிரமதான நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது .
இன் நிகழ்வில்-
1) பாடசாலையின் புதிதாக அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படாத மாணவர் மலசல கூடத்தினை சுத்தப்படுத்தி பயன்பாட்டுக்கு விடல்.
2) கைவிடப்பட்ட ஆசிரியர்களுக்கான பிரத்தியோக மலசல கூடத்தினை தூய்மைப்படுத்தலும் மீள்பாவனைக்கு கொண்டுவரலும்,
3)பிரதான நுழைவாயிலை அண்டிய வீதியோரத்தினை தூய்மைப்படுத்தல்.
4) பாடசாலையின் முன்பக்க வடிகான்கள் சுத்தப்படுத்தப்படுத்தப்படுத்தல்
போன்ற விடயங்கள் இடம்பெற்றன. இன் நிகழ்வில் அர்பணிப்புடன் பங்குபற்றிய மாணவர்களுக்கும் விசேட நன்றியினை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை இவ் நிகழ்வுக்கு சிற்றுண்டி ஏற்பாடுகளை வழங்கிவைத்த சகோதரர் ஜெய்னுதின் சாபி ஹாஜி அவர்களுக்கும் I.றிஸ்வான் ஆசிரியருக்கும் பாடசாலை நிருவாகம் மற்றும் பாடசாலை சமூகம் சார்பிலும் மகத்தான நன்றிகள் உரித்தாகட்டும்.





