க.பொ.உயர் தர விஞ்ஞான, கணித பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களின் அடைவு மட்டத்தினை மேம்படுத்துவதற்காக விசேட செயற்திட்டத்தினை ஆரம்பித்தல்.

இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் (2021) இல் கல்வி பொதுத்தராதர உயர்தர கணித மற்றும் விஞ்ஞானப்பிரிவில் பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களின் அடைவு மட்டத்தினை மேம்படுத்துவதற்காக விசேட செயற்திட்டத்தினை ஆரம்பிப்பது தொடர்பில் பெற்றார்களுடனான சந்திப்பு கடந்த 2021.02.22 அன்று திங்கள் காலை 10.00 am அளவில் இப்பிரிவிற்கான பகுதித் தலைவர் N.M. றிப்கான் ஆசிரியரின் நெறிப்படுத்தலில் கிழ் நடைபெற்ற ஒன்றுகூடலுக்கு பாடசாலையின் அதிபர் K.றஸிம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

இன் நிகழ்வில் இம்மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியைகளான திருமதி அஸ்லம் சுஜா முஸாதிக், நாதிரா ஹாரிஸ் மற்றும் சர்மிலா இம்ரான் ஆசிரியைகளுடன் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இவ் ஒன்றுகூடலில் சிறந்த பெறுபேறுகளை அடைந்து கொள்வதற்கா பல தீர்மானங்கள் எட்டப்பட்டன.

1) பாடசாலை கல்வியினை வெற்றிகரமான முறையில் மேற்கொள்வதோடு அதற்கு சமாந்தரமாக தொடராக பரிட்சைக்கு தோற்றும் வரை இம் மாணவர்களுக்கு விசேட செயற்திட்டத்திகான பிரத்தியோக வகுப்புகளை நடத்துதல்.

2) பிரத்தியோக வகுப்புகளினை பெற்றாரின் பங்களிப்புடனும் மேற்பார்வையுடனும் நடத்தப்படுவதுடன் நிதி கையாழ்கையினை பூரணமாக பெற்றோரே மேற்கொள்ளல்.

3) பெற்றோர் சார்பில் ஒரு குழுவினை அமைத்தலுடன் இக்குழுவின் ஊடாக நடத்தப்படும் இச் செயற்திட்டத்தினை (மேலதிக வகுப்புகளினை) ஒழுங்குபடுத்த பாடசாலையின் கணித, விஞ்ஞானப்பிரிவுக்கான பகுதிதலைவர் N.M. றிப்கான் ஆசிரியர் அவர்களினை நியமித்தல்.

4) மாதம்தோரும் மாணவர்களின் கற்றல் மேற்பாடு மற்றும் செயற்திட்டத்தின் செயற்திறன் தொடர்பில் ஒழுங்கு படுத்தப்பட்ட பெற்றார் குழுவின் ஊடாக மீளாய்வு கலந்துரையாடல்களினை ஏற்படுத்தல். போன்ற தீர்மானங்கள் எட்டபட்டு இவ் பெற்றார் கலந்துரையாடல் காலை 11.00 am மணியளவில் இவ் ஒன்றுகூடல் இனிதே நிறைவு பெற்றது.

  • நன்றி – பாடசாலை முகநூல் Copyright © 2021 AL-Hilal Central College All rights reserved.

Facebooktwitterredditpinterestlinkedinmail