க.பொ.சாதாரன தர மாணவர்களுக்கு அனுமதி அட்டை வழங்களும் மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வும்.

இவ்வருடம் (2021) மார்ச் மாதம் கல்வி பொதுத்தராதர சாதாரன பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பிரியாவிடையும் அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வும் இன்று காலை 10.30.00 am அளவில் பாடசாலையின் அதிபர் K.றஸிம் அவர்களின் தலைமையில் கணித அறையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.

இன் நிகழ்வினை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் வகுப்பாசிரியர்களான Mr.சஜீர், Mr. தில்ஸாத், Mr. முகம்மட் ஆசிரியர்களுடன் I.றிஸ்வான் ஆசிரியரும் நெறிப்படுத்தியதோடு இம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் உட்பட ஏனைய ஆசிரியர்கள் ,பட்டதாரி பயிலுனர்கள்,மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இன்நிகழ்வில் விசேட அம்சமாக பரிட்டைக்கு தோற்றும் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை அடைந்து கொள்வதற்காக 02 நிமிட பிராத்தனை இடம்பெற்றதோடு மாணவர்களுக்கு பரீட்சைக்கான அனுமதி அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் வழமை போன்று பாடசாலையின் கல்விசாரா ஊழியர் M.P. சஸிம் அவர்களால் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களினை ஊக்கப்படுத்தும் முகமாக பேனையும் வழங்கிவைக்கப்பட்டன.

Copyright © 2021 AL-Hilal Central College All rights reserved.

Facebooktwitterredditpinterestlinkedinmail