Hilalian 87 Batch ஒன்றுகூடல் – 2021

அல்-ஹிலால் பாடசாலையில் 1976 ஆம் ஆண்டு முதலாம் தரத்தில் கற்க ஆரம்பித்து 1987 ஆம் ஆண்டு O/L வரை கற்ற பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இன்று அல்ஹிலால் பாடசாலை ஒன்றுகூடல் நிகழ்வு 35 வருடங்களின் பின்னர் மிக சிறப்புற நடைபெற்றது.

தங்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கி எமது பாடசாலைக்கு ஏதோவொரு வகையில் உதவிகளை அளிக்க முன்வரவேண்டும் என்று தங்களுக்குள் ஒருமித்த தீர்மானத்தையும் எடுத்துள்ளனர்.

இந்நிகழ்வு குறித்த Batch இல் கல்வி கற்ற Sareef Mohamad Naleem அவர்களின் தலைமையில் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டடதோடு, குறித்த நிகழ்வில் 90% பழைய மாணவர்களும் கலந்து தங்களின் பாடசாலை வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டமையும் தங்களுடன் கற்றவர்களில் மரணித்தவர்களுக்கான துஆ பிரார்த்தனையும் நடைபெற்றமை விசேட அம்சமாகும்.

இதுபோன்று ஏனைய பழைய மாணவர்களும் ஒன்றுகூடலை தமது Batch சார்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்.

– OBA
Facebooktwitterredditpinterestlinkedinmail