மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வும் உயர்தர மாணவர்களுக்கான வழிகாட்டல் ஆலோசனை கருத்தரங்கு – கட்டம் – 03

மேற்படி நிகழ்வானது பாடசாலையின் ஒழுக்காற்று சபையின் ஏற்பாட்டில் கல்லூரியின் அதிபர் K. றெஸிம் அவர்களின் தலைமையில் இன்று ( 2021.02.18) காலை 9.00 am மணிதொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை இரு கட்டங்களாக நடைபெற்றது.

1) மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியில் மாணவத்தலைவர்கள் பங்கு பற்றியதோடு,

2) ஆலோசனை வழிகாட்டல் கருத்தருங்கும் மற்றும் மாணவர் ஒழுக்கவியல் விடயங்களும் தொடர்பிலான செயலமர்வில் பாடசாலையின் உயர்தர விஞ்ஞானப்பிரிவு,கணிதப்பிரிவு, கலை, மற்றும் வர்தகப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இன் நிகழ்வில் துறைசார்ந்த வளவாளராக கிழக்கு மாகாண கல்விப் பணிமனையின் மேலதிக மாகாண கல்வி பணிப்பாரும், சட்டத்தரணியும் , மாவனல்லை சாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபரும் மற்றும் மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளருமான அஷ்-செய்ஹ் ஜவாத் நளீமி அவர்கள் கலந்துகொண்டு தலைமைத்துவம் தொடர்பானதும் , ஆலாசனைகளும் வழிகாட்டல் தொடர்பிலான ஆக்க பூர்வமானதுமான கருத்துக்களினை வழங்கினார்கள்.

மேற்படி நிகழ்வில் பல்வேறு வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் பாடசாலையின் முன்னேற்றத்தில் பல்வேறு வழிகளிலும் அயராது பங்காற்றும் பாடசாலையின் பழைய மாணவரும் முன்னாள் ஆசிரியருமானஅஷ்-செய்ஹ் ஜவாத் நளீமி அவர்களுக்கு பாடசாலை நிருவாகம், சமூகம் சார்பில் மகத்தான நன்றிகள் உறித்தாகட்டும்…

Facebooktwitterredditpinterestlinkedinmail