பாடசாலை நலன்கருதிய ஒன்றுகூடல் 2021
பாடசலையில் கற்ற புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்களுக்கும் ஆசிரியர்களும் இடையிலான கலந்துரையாடல் இன்று(17.01.2020) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
மேற்படி ஒன்றுகூடலில் பாடசாலை அபிவிருத்தி, மாணவர்களின் ஒழுக்காற்று மற்றும் பாடசாலை நிர்வாக சீராக்கம் தொடர்பில் முக்கிய ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்தும் இக்குழுவினரினால் பல மட்டங்களில் ஆலோசனைகள் பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்படி ஒன்றுகூடலை ஒழுங்கு செய்த பாடசாலையின் புத்திஜீவிகள், துறைசார் ஆளுமைக்களுக்கு பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை நிர்வாகம் சார்பில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்றோம்.
