Hilalian OBA முன்னெடுப்புகள் 💪

ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு Hilalian OBA நிர்வாக சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாடசாலையின் உள்ளக மற்றும் வெளியக செயற்பாடுகளும் அபிவிருத்திகளும்…

ஒரு பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் எவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளமுடியும் என்ற முன்மாதிரியை எமது பாடசாலை OBA நிர்வாகம் செய்து காட்டியுள்ளது. அவ்வகையில் மேற்படி வேலைத்திட்டங்களில் துணை நின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

அவ்வகையில்
👉 17/ September /2018 – MCC’ian Blast வாகன ஊர்வலத்தை கௌரவிக்கும் முகமாக எமது OBA ஏற்பாட்டில் நினைவு சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

👉 10/ October /2018 – ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சுமார் 50,000 ரூபாய் பெறுமதியான பரிசில் பொருட்கள் ஆசிரியர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதோடு, ஆசிரியர் தின நிகழ்ச்சியை முழுமையாக ஆவணப்படுத்தி இருவெட்டும் வெளியிடப்பட்டது.

👉 14/ October /2018 – OBA வேண்டுகோளிற்கு இணங்க தற்காலிகமாக அமர்த்தப்பட்ட அதிபர் கே.றசீம் Sir தலைமையில் இத்ரீஸ் அவர்களினால் இரவு நேர கற்கைக்கு மின்குமிழ் வசதிகள் செய்து தரப்பட்டமை.

👉 11/ January / 2019 – OBA வேண்டுகோளிற்கு இணங்க 2002 O/L Batch பழையமாணவர்கள் மூலமாக அதிபர் முன்னிலையில் ஒருதொகை White-Board பாடசாலை கற்றல் நடவடிக்கைகளிற்கு வழங்கி வைக்கப்பட்டது.

👉 29/ January / 2019 – இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு Hilalian OBA இன் முழு அனுசரணையில் மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது.

👉 18/ February / 2019 – முதலாவது பொதுப் பழையமாணவர் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஒருவருட திட்டம் ஒன்றை வரையறை செய்தது OBA நிர்வாகம்.

👉 20/ February / 2019 – இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு Football Games ஒழுங்கு செய்து அதற்கான நிதி உதவிகள் (20,000) அளித்தமை.

👉 22/ February /2019 – Hilalian OBA இன் பூரண ஏற்பாட்டில் பாடசாலை நிர்வாகமும் ஒன்றிணைந்து புதிய SDC நிர்வாகம் தாபிக்கப்பட்டது.

👉 23/ February /2019 – வலையமட்ட மெய்வல்லுனர் போட்டியில் Football Games இல் சம்பியன் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வாகன பேரணி ஒழுங்கு செய்தமை.

👉 25/ February /2019 – OBA நிர்வாக கோரிக்கு அமைவாக Hilalian 2k10 Batch சார்பாக இல்லவிளையாட்டு போட்டிக்கான ஒலி அமைப்பு (15,000) ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

👉 26/ February /2019 – இல்லவிளையாட்டு போட்டியின் பூரண அனுசரணையை (38,000 ரூபாய்) Hilalian OBA நிர்வாகம் பொறுப்பேற்றமை.

👉 26/ February /2019 – OBA வேண்டுகோளிற்கு அமைய மேற்படி நிகழ்விலே ஹிலாலியன் பழைய மாணவர் முன்னர் மாகணசபை உறுப்பினர் சட்டத்தரணி JM.Laheer அவர்களினால் 50,000 பணம் அன்பளிப்பு செய்யப்பட்டது.

👉 26/ February /2019 – அதே நிகழ்வில் அங்கத்தவர்களின் சொந்த நிதியில் Hilalian OBA நிர்வாகத்திற்கு என்று உத்தியோகபூர்வ சீருடை அறிமுகம் செய்யப்பட்டது.

👉 28/ February /2019 – பாடசாலையின் உள்ளக நிர்வாக சிக்கலை நிவர்த்திக்கும் வகையில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் OBA அங்கத்தவர்களை ஒன்றிணைத்த ஒரு தேநீர் உபசாரம்.

👉 28/ February /2019 – பாடசாலை மைதானத்திற்காக 500,000 (5 மில்லியன்) நிதி ஒதுக்கீடு SLMC தலைவரின் ஒதுக்கீட்டில் MS Thowfeek அவர்களின் ஒருங்கிணைப்பில் கிடைக்கப்பெற்றமை.

👉 1/ March /2019 – 2019 ஆம் ஆண்டுக்கான மூதூர் கோட்டமட்ட விளையாட்டுப்போட்டியின் எமது பாடசாலை சம்பியன் பெற்றுக்கொண்டதை விமர்சையாக கொண்டாடியமை.

👉 5/ March / 2019 – அன்று தொடக்கம் மிக அண்மைய நாள் வரையில் பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் தகவல் சேகரிப்பு மற்றும் அதற்கான ஒழுங்கமைப்புகளை ஒவ்வொரு மாணவர் தொகுதி ரீதியாக முன்னெடுப்பு செய்யத்தொடங்கியமை. இதனை கருத்தில் கொண்டு HILALIAN VOLLEYBALL TOURNAMENT ஒன்றை ஏற்பாடு செய்ய முடிவெடுத்தமை.
இவ்வாறான முன்னெடுப்பின் விளைவாக பிரிந்து காணப்பட்ட பழைய மாணவர்கள் தானாகவே ஒன்றினையும் சந்தர்ப்பத்தினை உருவாக்கி HILALAIN என்ற நாமத்தை ஆழமாக பதிக்கவைத்தமை.

👉 22/ March /2019 – பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம், கல்வி மற்றும் இதர காரணிகளை கருத்தில்கொண்டு SDC ஏற்பாட்டில் பெற்றோர் சந்திப்பை மேற்கொள்ள அழுத்தம் கொடுத்து அதனை நடாத்த பக்க பலமாகவும் உறுதுணை நின்றமை.

👉 25/ March /2019 – வருடாந்த தேசிய தமிழ்தின போட்டியில் வலையமட்டம் தொடக்கம் மாகாண மட்டம் வரையான போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கான போக்குவரத்து உதவிகள் அளித்தமை.

👉 26/ March /2019 – OBA சார்பாக விடுக்கப்பட்ட கோரிக்கை M.S.Suhaib (2009 O/L batch) அவர்களால் இரவுநேர கற்கை உதவிகள் பெற்றுக்கொடுத்தமை.

👉 30/ March /2019 – பழைய மாணவர்களை ஒன்றிணைக்க மாணவர் தொகுதி (BATCH) ரீதியாக இணைப்பாளர்களை தேர்வு செய்து அதனூடாக ஒரு பழைய மாணவர் பொதுக்குழு ஒன்றை நிறுவியமை.

👉 2/ April /2019 – இணைப்பாளர் ஒன்றுகூடலில் 60,000 ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டத்தை BATCH ரீதியாக பகிர்ந்தளித்து அதனை உடன் நிறைவேற்ற ஒழுங்கமைப்பு செய்தமை.

👉 5/ April /2019 – 13 வருட உத்தரவாதம் அளிக்கப்பட கற்கை நெறிக்கான விளம்பர பதாகை அளிக்க பாடசாலைக்கு உதவியமை.

👉 5/ April /2019 – Hilalian Oba வேண்டுகோளிற்கு இணங்க துறைமுகங்கள் கப்பல் துறை பிரதி அமைச்சர் கெளரவ அப்துல்லாஹ்ம ஹ்றூப் அவர்களினால் 2019 ம் ஆண்டுக்குரிய கம்பரலிய வேளைத் திட்டத்தின் கீழ் எமது அல்ஹிலால் பாடசாலையின் திருத்தவேலைக்கு என்று ஒரு மில்லியன் (1,000,000) ரூபாய் வழங்கி பெற்றுத்தர உதவியமை.

👉 18/ April /2019 – புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தொழிநுற்ப கற்கை சிறப்புற நடைபெற எமது பாடசாலையின் தொழிநுற்ப கற்கை கற்ற மாணவர்களை ஒன்றிக்கும் Hilalian Technology Union என்ற அமைப்பை தோற்றுவித்தமை.

👉 21/ April /2019 – HPL 2k19 இராத்திரி கரப்பந்து சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்தமை. (நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் இது தள்ளிவைக்கப்பட்டது)

👉 20/ MAY /2019 – நோன்பை தொடர்ந்து இணைப்பாளர்களுக்கான இப்தார் ஏற்பாடு (18,000 ரூபாய்) செய்தமை.

👉 24/ July /2019 – U nder 16 Football Team தேசிய ரீதிக்கு தகுதி பெற்றதை ஊக்குவிக்கும் முகமாக JM. லாஹீர் அவர்களின் நன்கொடையில் மாணவர்களுக்கான விளையாட்டு சீருடை வழங்கி வைக்க உதவியமை.

👉 25-30 / July /2019 – கந்தளாயில் நடைபெற்ற மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சிக்கான மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் சிற்றுண்டி ஏற்பாடுகள் மற்றும் புகைப்பட ஏற்பாடுகள் என்று சுமார் 20,000 ரூபாய் ஒதுக்கீடு செய்தமை.

👉 01/ August /2019 – மாகாணமட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களை கெளரவிக்கும் வாகன ஊர்வலம் ஏற்பாடு செய்தமை.

👉 03/ August /2019 – அப்துல்லாஹ் மஹ்றூப் அவர்களினால் மெய்வல்லுனர்களுக்கான ஊக்குவிப்பு பரிசாக சுமார் 50,000 ரூபாய் வழங்கிட ஏற்பாடு செய்தமை.

👉 20/ August /2019 – தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளுக்கு தெரிவான மாணவர்களுக்கான காலணி, ஊக்குவிப்பு பணம் மற்றும் பதக்கங்கள் வழங்கியமை.

👉 23/ August /2019 – குறுந்தூர ஓட்ட வீரர்களுக்கான நேர கணிப்பு மணி மற்றும் சில விசேட உபகரணங்கள் வழங்கியமை.

👉 23/ August /2019 – MCC, ACC & Al-Hithaya மூன்று பாடசாலைகளை ஒன்றிணைத்து பொதுவான OBA நிறுவுதல் மற்றும் போட்டிகள் நடாத்துதல் திட்டத்தை முன்மொழிவு செய்தமை.

👉 24/ September /2019 – HILALIAN டT-Shirt ஒன்றை உத்தியோக பூர்வமாக வெளியீடு செய்தமை.

👉 29/ September /2019 – Hilalian Premier League 2k19 முன்னிட்டு நட்புறவு ரீதியிலான பயிற்சிப்போட்டிகள் ஏற்பாடுகள் செய்தமை.

👉 5/ October /2019 – OBA ஏற்பாட்டில் HROPA mutur அனுசரணையில் விசேட பயிற்றுவிப்பாளர் மற்றும் மாணவர்களுக்கான அனுசரணை அளிக்கும் வளங்களை பெற்றுக்கொடுத்தமை.

👉 10/ October /2019 – சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 20,000 பெறுமதியான பரிசில்கள் ஏற்பாடு செய்தமை.

👉 11/ October /2019 – HPL 2k19 கிரிக்கட் சுற்றுப்போட்டியை முன்னிட்டு ஹிலாலியன் வாகன பேரணி ஒழுங்கமைத்தமை.

👉 12,13,14/ October /2019 – இறுதியாக 126,000 செலவில் HPL 2k19 கிரிக்கட் சுற்றுப்போட்டியை ஏற்பாடு செய்தமை.

👉 எமது பாடசாலை மற்றும் OBA , SDC செய்திகளை வெளியுலகிற்கு தெரியப்படுத்தவும், ஆவணக்காப்பு செய்து வைக்கவும் சமூக வலைத்தள பக்கத்தை தோற்றுவித்தமை.

👉 இவை அனைத்தையும் விட மிக நீண்ட அபிவிருத்தி திட்டமான தேசிய பாடசாலையாக மற்றும் ஆவண தொகுப்பு மற்றும் அதனை கொண்டு அரசியல் மற்றும் இதர தொடர்புகளினூடாக 07 மாதங்கள் மேலாக முயற்சிக்கின்றமை.

எதிர்கால திட்டங்களாக இருக்க கூடியவை
👉 2021 இல் எதிர்நோக்கி இருக்கும் எம் பாடசாலையின் வைர விழாவை சிறப்புற நடாத்துதல்.


👉 வைரவிழாவில் ஹிலாலியன் என்ற ஆவண நூல் உருவாக்கம் ஒன்றை வெளியீடு செய்தல்.


👉 தேசிய பாடசாலையாக தரமுயர்த்தல்.


👉 கண்காட்சி, கலைவிழா மற்றும் இதர பழைய மாணவர்கள் கொண்ட வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல்.


👉 எமது பாடசாலைக்கான மைதானத்தை புணரமைத்தல் மற்றும் அதற்கான ஏனைய வசதிகளையும் ஏற்படுத்துதல்.


👉 நிலையான சேமிப்பை பழைய மாணவர்களுக்கு என்று ஏற்படுதல்.


👉 இளம் அங்கத்தவர்களை இனங்கண்டு அவர்களை வழிநடத்தி ஜூனியர் OBA என்ற கட்டமைப்பை நிறுவுதல்.


👉 5 வருட நிலையான திட்டம் ஒன்றை வகுத்தல்.


👉 Hilalian Junior OBA என்ற கட்டமைப்பை தோற்றுவித்தல்.

இனிவரும் காலங்களில் எமது முன்னெடுப்புகள் தொடர்ந்தும் வெற்றியளிக்க அனைத்து பழைய மாணவர்களும் மற்றும் பாடசாலை சமூகமும் இன்னும் பெற்றார்களும் பூரண ஒத்துழைப்பும், வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
H I L A L I A N O B A

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *