தரம் 06 இற்கு புதிய மாணவரினை உள்ளீர்பதற்கான வரவேற்பு நிகழ்வு.

மேற்படி தரம் 06 ற்கான புதிய மாணவர்களை உள்ளீர்க்கும் முகமாக சுகாதார வழிமுறைகளான வரவேற்பு நிகழ்வு கல்லூரியின் வளாகத்தின் திறந்த வெளி அரங்கில் மிகவும் எளிமையான முறையில் 2021.01.25ம் திகதி அதிபர் K.றஸிம் அவர்கள் தலைமையில் முற்பகல் 9.00 மணியளவில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் அதிபர் உரையாற்றும் போது மாணவர்களின் கல்விப் பங்களிப்பில் ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றோர்களின் பங்களிப்பின் அவசியத்தினையும் வழியுருத்தியதோடு Covid19 கருத்திற்கொண்டு சுகாதார வழிமுறையுடன் மாணவர்களினை பாடசாலைக்கு அனுப்புவதன் அவசியத்தை வழியுருத்தினார்.

அத்தோடு மாணவர்களின் தளபாட பற்றாக்குறையினை கருதிற்கொண்டு தன்னால் வலயக் கல்வி அதிகாரிகளின் உதவியுடன் அருகிலுள்ள பாடசாலையான தி/மு/அல்மனார் வித்தியாலம், தி/மு/அஸ்ரப் வித்தியாலயம் , தி/மு/ஹக்கிம் வித்தியாலயம் , தி/மு/அல்ஹிலால் ஜூனியர் வித்தியாலம், போன்ற பாடசாலை அதிபர்களிடம் கோரப்பட் உதவிக்கமைவாக மேற்படி பாடசாலைகளிலிருந்து பெறப்பட்ட  சேதமைடைந்த மற்றும் பகுதியளவில் சோதமடைந்த கதிரை , மேசைகளினை தந்து உதவியமைக்கு நன்றிகளினை தெரிவித்தோடு இவ் தளபாடத்தினை மீள்பானைக்கு தரமான வகையில் பெற்றோர்களின் பங்களிப்புடன் புரைமைத்த K.P .ஐப்ரி ஆசிரியர் குழுவினருக்கும் , மற்றும் பல வழிகளிலும் பங்களிப்பு செய்த ஏனையோருக்கும் நன்றியினை தெரிவித்தார்.

இதில் பிரதம விருந்தினனாக வருகை தந்த வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடலுக்குக்கு பொருப்பான பிரதி கல்வி பணிப்பாளரும் எமது பாடசாலைக்கான கல்வி மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளருமான A.M. M.சியாத் Sir பாடசாலையின் உதவி அதிபர் A.M. நஸாத் ஆசிரியர் , மாணவர் உள்ளீர்ப்பு குழு தலைவர் A.J. சலித் ஆசிரியர் , கல்லூரியின் பகுதித் தலைவர்கள் , ஆசிரிய , ஆசிரியைகள், பெற்றோர்கள் , மற்றும் தரம் 06 ற்கான புதிய மாணவர்களும் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து உரையாற்றிய பிரதிக் கல்விப் பணிப்பாளர் A.M.A. சியாத் வெற்றிகரமானதும் மகிழ்ச்சி கரமானதுமான பாடசாலை எவ்வாறு அமையப்படல் வேண்டும் என தெளிவுபடுத்தினார் .

இறுதியாக நன்றியுரையினை ஆசிரியர் வதுத் -முகம்மட் சல்மி (நளிமி) நிகழ்த்தினார்.

Facebooktwitterredditpinterestlinkedinmail