இடமாற்றம் பெற்றுச் செல்லும் குணசீலன் சேர்.
2016.02.04 ஆம் திகதி முதல் தி/மூ/அல் ஹிலால் மத்திய கல்லூரியில் சித்திரப் பாட ஆசிரியராக கடமையாற்றி வந்த குணசீலன் சேர், இன்று(2021.02.09) ஐந்து வருடங்களின் பின்னர் தனது சொந்த ஊரான மட்டக்களப்பு – கொக்கட்டிச் சோலையைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார்.
போக்குவரத்து, தங்குமிடம் போன்ற பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் தனது ஆசிரிய பணியை செவ்வனே ஆற்றி வந்தார்.
இவர் கடமையாற்றிய காலப்பகுதியில் உயர்தர மாணவர்களுக்கு சித்திரத்தை ஒரு பாடமாகக் கற்பித்து மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியுள்ளார். இவர் வலய,மாவட்ட,மாகாண,தேசிய மட்டங்களில் மாணவர்களை சித்திரப் போட்டிகளில் பங்குபெற வைத்து பரிசில்களையும், சான்றிதழ்களையும் பெற காரணமானவர்.
குணசீலன் சேர், சக ஆசிரியர்களோடும், மாணவர்களோடும் அன்பாகவும் பண்பாகவும் பழகக்கூடியவர். அவர்களது ஆசிரிய சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.
